பேன்சி கடையில் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பகவதி அம்மன் கோவில் சன்னதி தெருவில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பக்ஷராம்(45) என்பவர் பேன்சி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வியாபாரம் முடிந்து கடையை பூட்டுவிட்டு பக்ஷராம் வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது கடையின் மேற்கூரை ஓட்டை பிரித்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கல்லாவில் இருந்த 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து பக்ஷராம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். கோவில் திருவிழா நடைபெற்ற நிலையில், மர்ம நபர்கள் கடைக்குள் புகுந்து பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.