மக்கள் இனி புதிதாக வாங்கிய கை துப்பாக்கிகளை நாட்டிற்குள் கொண்டுவர முடியாது என கன்னட பிரதமர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கனடாவில் கைதுப்பாக்கிகளின் விற்பனை வாங்குதல் மற்றும் பரிமாற்றம் செய்வதற்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்படுவதற்காகவும் இது உடனடியாக அமல்படுத்தப்படும் என அந்த நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். கனடா நாடாளுமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாவை நிறைவேற்றுவது தொடர்பாக விவாதம் மேற்கொண்டு வருகின்றனர். புதிய கை துப்பாக்கி முடக்கம் ஒரு உடனடி நடவடிக்கை என ட்ரூடோ நிர்வாகம் தெரிவித்து வந்தது.
இந்த நிலையில் கன்னட பிரதமர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, மக்கள் கொல்லப்படும்போது, மக்கள் பாதிக்கப்படும்போது பொறுப்பான தலைமை நாம் சிறப்பாக செயல்பட வேண்டும். துப்பாக்கிகள் சம்பந்தமாக மீண்டும் பல கொடூரமான சம்பவங்களை உதாரணமாக நாங்கள் பார்த்திருக்கின்றோம். மக்கள் இனி கனடாவிற்கு கைதுப்பாகிகளை வாங்கவோ அல்லது விற்கவோ அல்லது மாற்றவும் முடியாது. மேலும் அவர்கள் புதிதாக வாங்கிய கைதுப்பாக்கிகளை நாட்டிற்குள் கொண்டுவர முடியாது என அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே துப்பாக்கிகள் மீது கடுமையான சட்டங்களை வைப்பது துப்பாக்கி வன்முறையை குறைக்காது என துப்பாக்கி உரிமைகளுக்கான கனடா கூட்டணி பிரதமர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.