இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு யோகி ஆதித்யநாத் பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது உனா மாவட்டத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய போது, பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் இந்தியா பல்வேறு உச்சங்களை தொட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் நாட்டின் மதிப்பு சர்வதேச அளவில் உயர்ந்துள்ளது. மேலும் நாட்டின் பாதுகாப்பில் கண்ணும் கருத்துமாக இருக்கும் மத்திய பாஜக அரசு நாட்டின் எதிரிகளை துல்லிய தாக்குதல்கள் மூலமாக அளித்தது.
இதனை அடுத்து நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு ராமர் கோவிலை பிரம்மாண்டமாக கட்டி வருகிறது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துள்ளது. இது போன்ற முக்கியமான விஷயங்களில் காங்கிரஸ் கட்சி எடுத்த நடவடிக்கைகள் என்ன.? ஒன்றுமே கிடையாது என்பது தான் உண்மை முந்தைய காங்கிரஸ் அரசு தனது வாக்கு வங்கி அரசியலுக்காக நாட்டின் பாதுகாப்பையே விட்டுக் கொடுத்தது. மேலும் அரசியல் லாபத்திற்காக மக்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்பட்டது. இப்போது வரை அதை தொடர்ந்து வருகிறது நாட்டின் பாதுகாப்பு பற்றியும் நாட்டு மக்களின் உணர்வுகள் பற்றியும் காங்கிரஸ் கட்சிக்கு எந்தவிதமான கவலையும் கிடையாது இது போன்ற கட்சிக்கு மக்கள் ஏன் வாக்களிக்க வேண்டும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.