Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“மக்கள் குறைகேட்பு கூட்டம்” மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டார்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் மாற்றுத்திறனாளிகளிடம் நேரில் சென்று மனுக்களை பெற்றுக் கொண்டார். அதன்பிறகு 2 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு  78,500 ரூபாய் ஆகும். இதைத்தொடர்ந்து பொது மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது. இதில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம், முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம், வீட்டு மனை பட்டா, தொழில் தொடங்க கடன் உதவி போன்ற கோரிக்கைகள் எழுதப்பட்டிருந்தது.

மேலும் பட்டா மாறுதல், விதவை உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை போன்ற கோரிக்கைகளும் எழுதப்பட்டிருந்தது. இந்த மனுவை மாவட்ட ஆட்சியர் கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இந்த குறைகேட்பு கூட்டத்தில் மொத்தம் 260 மனுக்கள் பெறப்பட்டது. இந்தக் கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் ராஜாமணி, ராஜவேல், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சுப்பிரமணி உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Categories

Tech |