Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“மக்கள் குறைகேட்பு கூட்டம்” அதிரடி காட்டிய அமைச்சர்…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் காந்தி கலந்து கொண்டார். இவர் மக்களின் குறைகளை நேரில்  கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில் பொதுமக்கள் நிலப் பட்டா, வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல், குடிநீர் வசதி, வேலை வாய்ப்பு வசதி போன்ற 213 மனுக்கள் மக்களிடம் இருந்து பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

அந்தக் கூட்டத்தில் காது கேளாத மற்றும் கண் பார்வை பாதிக்கப்பட்ட  ஒரு மாற்றுத்திறனாளி மனு கொடுப்பதற்காக வந்திருந்தார். அவருக்கு அமைச்சர் காந்தி கைபேசி வழங்கினார். அதன் மதிப்பு ரூபாய் 12,600 ஆகும். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முகமது அஸ்லம், துணை மாவட்ட ஆட்சியர் இளவரசி, தாரகேஸ்வரி, ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் லோகேஸ்வரி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Categories

Tech |