அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு நேற்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் அம்ரித் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் அரசு பள்ளியின் மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு மனு அளித்துள்ளனர். அதாவது கூடலூர் அருகே மரப்பாலம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 45-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி கட்டிடம் கடந்த 2003-ஆம் வருடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் தற்போது பழுதடைந்து விட்டது.
இதன் காரணமாக மாணவர்களின் நலன் கருதி அவர்களை வேறு கட்டிடத்தில் மாற்றியுள்ளோம். ஆனால் அந்த கட்டிடமும் பழுதடைந்து தரமற்றதாக இருக்கிறது. எனவே மாணவர்களின் நலன் கருதி புதிய கட்டிடம் கட்டித் தருமாறு கோரிக்கை மனு அளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் 3:பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அதாவது மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண உதவித்தொகை, படித்த இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு திட்டம் என மொத்தம் 91,941 ரூபாய் மதிப்பிலான காசோலைகள் வழங்கப்பட்டது, இதை மாவட்ட ஆட்சியர் அம்ரித் வழங்கினார்.