மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ், கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சாலைதவவளவன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் பொதுமக்களிடம் இருந்து இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக் கடன் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 345 மனுக்கள் பெறப்பட்டது.
இந்த மனுக்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பபட்டது. மேலும் மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரங்களை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களைமாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் அறிவுறுத்தியுள்ளார்.