Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மக்கள் குறைதீர் கூட்டம்…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு…. பொதுமக்கள் மகிழ்ச்சி…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக கடலூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறாமல் இருந்துள்ளது. இந்நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் மீண்டும் மாவட்ட ஆட்சியர் வாரந்தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என கூறியுள்ளார். இந்த கூட்டம் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று நடைபெறும்.

இந்த குறைதீர் கூட்டங்களில் மக்கள் நேரடியாக மாவட்ட ஆட்சியரிடம் தங்களது குறைகளை மனுவாக எழுதி கொடுக்க வேண்டும். இந்த குறைதீர் கூட்டங்களுக்கு வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் இருக்க வேண்டும் எனவும், பொதுமக்கள் தங்களுடைய மனுக்களில் ஆதார் அட்டை எண், தொலைபேசி எண் ஆகியவற்றை கட்டாயம் இணைக்க வேண்டும் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |