மாவட்ட ஆட்சியர் பொது மக்களுக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா வீடு வழங்கும் திட்டம், என்எல்சி, காவல்துறை, வேலை வாய்ப்பு மற்றும் வீட்டு மனை பட்டா தொடர்பாக பல்வேறு மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.
இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் கூடிய விரைவில் மனுக்கள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். மேலும் சிறுபாக்கம் கிராமத்தில் வசிக்கும் 13 பழங்குடியின குடும்பங்களுக்கு மாவட்ட ஆட்சியர் வீட்டுமனை பட்டா ஆணையை வழங்கினார்.