மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக புதிய துறை ஒன்றை உருவாக்கி மு க ஸ்டாலின் கையெழுத்திட்டார்.
தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் முக ஸ்டாலினுக்கு காலை ஆளுநர் காலை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினார். இன்று தலைமை செயலகத்திற்கு முகஸ்டாலின் வருகை தந்தார். முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் முகஸ்டாலின் முதன்முறையாக தலைமைச் செயலகம் வருகை தந்தார் அப்போது அவருக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் விருது வழங்கப்பட்டது இதை தொடர்ந்து பல முக்கிய ஆவணங்களில் அவர் கையெழுத்திட்டார்.
மேலும் முதலமைச்சரானால் அடுத்த 100 நாட்களுக்குள் உங்கள் பிரச்சனைகள் எல்லாம் தீர்க்கப்படும் என தாலுகா தாலுகாவாக சென்று பொதுமக்களிடம் மனுக்களை வாங்கிய நிலையில் அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தலைமையில் தனி துறை ஒன்றை உருவாக்கி தமிழக முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார்.