Categories
பல்சுவை

மக்கள் சேவகன் நான்…. ஆணையிடுங்கள் காத்திருக்கிறேன்…. அப்பழுக்கற்ற முன்னாள் முதல்வர் அண்ணா…!!

 பேரறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு அவர் பற்றிய சிறப்பு தொகுப்பு. 

அண்ணா ஒரு அறிவுக்களஞ்சியம் என்றால் அது மிகையாகாது. அந்த அளவிற்கு அறிஞர்களுக்கு எல்லாம் பேரறிஞராக அவர் திகழ்ந்தார். அப்பழுக்கற்றவர், அரசியல் வாரிசை ஆதரிக்காதவர் என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் தலைசிறந்த எழுத்தாளர்கள் மற்றும் பேச்சாளர்கள் ஆன வில்லியம் சேக்ஸ்பியர், ஜார்ஜ், கார்க்கி ஆகியோரின் வரிசையில் இடம்பிடித்து தன் பேச்சாற்றலால் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார் முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா. அவரது அறிவார்ந்த பேச்சால் தென்நாட்டு பெர்னாட்ஷா என்று அழைக்கப்பட்டார்.

பொதுவாழ்க்கைக்கு வருபவர்கள் பொதுமக்களின் சேவகர்கள். ஆகையால் இந்த சேவகனுக்கு கட்டளையிடுங்கள் பணியாற்ற காத்திருக்கிறேன் என்றார் அண்ணா. அவர் தன் வசீகரப் பேச்சால் பகுத்தறிவை பாமரனுக்கும் ஊட்டினார். 40 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைத்து அதன் மூலம் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார். நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரை நாடு முழுவதும் எதிரொலித்தன. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் பெரும்பான்மையான காங்கிரஸுடன் நேரு பிரதமராக இருந்தபோது தனது வசீகரப் பேச்சால் நாடாளுமன்றத்தை நடுங்க வைத்தார் அண்ணா.

அதிக அளவில் பேசப்படும் ஹிந்தியை ஆட்சி மொழியாக மாற்றுவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று முன்னாள் பிரதமர் நேரு கேட்டபோது அதிகமாக வாழும் காக்கையை தேசிய பறவையாக மாற்றாமல் எதற்காக மயிலை ஆக்கினீர்கள் என மறு கேள்வி கேட்டார் அண்ணா.  மெட்ராஸ் மாநாட்டை தமிழ்நாடு என்று மாற்றுவதால் என்ன நடக்கப்போகிறது என நேரு கேட்டதற்கு ராஷ்ட்ரபதியை  ஜனாதிபதி ஆக்கியதால் என்ன விளைந்தது அதுவே தமிழ்நாடு என்று பெயர் மாற்றுவதால் நடக்கும் என்று கூறினார் அண்ணா.

இந்தியா என்று ஒன்றுபட்ட நாட்டுக்குள் தமிழ்நாடு என்று இன்னொரு நாடா இது தேச ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்காத என நேரு வினவினார். அதற்கு இந்தியா ஒரு நாடு இல்லை பல்வேறு மாநிலங்கள் ஒன்றிணைக்கப்பட்ட ஒரு துணை கண்டம் என்றார் அண்ணா. இந்நிலையில் தனி நாடு, திராவிட நாடு கோரிக்கையை அண்ணா முன் வைத்தார் அதன் பின் அதனை அவரே திரும்ப பெற்றுக் கொண்டார். ஆனால் அண்ணாவின் பேச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் பிரிவினைவாத தடுப்பு சட்டத்தை அண்ணா என்ற தனி மனிதனுக்காக கொண்டுவந்தார் நேரு.

வேறு எவருக்கும் இல்லாத இந்த வரலாறு அண்ணாவுக்கு மட்டுமே உண்டு. தாய்மொழி தமிழ் மீது அண்ணாவுக்கு அளவுகடந்த பற்று உண்டு. எல்லாப் புத்தகங்களையும் விட சிறந்த புத்தகம் இந்த பரந்த உலகம் தான். உலகத்தை விட உன்னதமான புத்தகம் வேறு எதுவும் கிடையாது என்பது அவரது ஆணித்தனமான கருத்தாகும். நூலானது ஒட்டுமொத்த உலகத்தையும் கைக்குள் அடக்கி விடும். ஆகவே வீட்டுக்கு ஒரு நூலகம் அமைக்க வேண்டும் என்றும் அதுவே அறிவார்ந்த தலைமுறைகள் உருவாக்கும் என்றும் அண்ணா கூறினார்.

அண்ணா ஒரு அறிவின் உச்சம் என்பதை வெளிநாடுகளில் அவர் ஆற்றிய உரையே நிரூபித்தது. தமிழகத்தின் அறிவு களஞ்சியமான அண்ணா அறிஞர்களுக்கு எல்லாம் பேரறிஞர் ஆனார். காலத்தின் கொடுமை அண்ணா புற்று நோயால் பாதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல வேண்டி இருந்தது. மருத்துவமனையில் தனக்கான அறுவைசிகிச்சையின் போது உயிர் பிழைப்போமா உயிர் துறப்போமா என்று தெரியாத நிலையில் மருத்துவர்களிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார் அண்ணா.

எனக்கான அறுவை சிகிச்சையை ஒரு நாள் தள்ளி வைக்க முடியுமா என கேட்டுக்கொண்டார். ஏன் என மருத்துவர்கள் காரணம் கேட்டதற்கு நூல் ஒன்றைப் படிக்கத் தொடங்கிவிட்டேன். அதனை முழுமையாக படித்து முடித்துவிட வேண்டும் என்ற ஆவல் தான் என பதில் கூறினார். இதனைத் தொடர்ந்து அவர் மும்பை செல்வதற்காக விமான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் 10 புத்தகங்கள் படிக்க வேண்டி இருக்கிறது அது காரில் சென்றால் தான் மூன்று நாட்கள் பயணத்தில் படித்து முடிக்க முடியும்.

ஒன்றரை மணி நேர விமான பயணத்தில் அவற்றைப் படிக்க இயலாது என அண்ணா கூறினார். 1962ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி அண்ணா மறைந்தார். வேறு எந்த தலைவருக்கும் இல்லாத அளவு அவரது இறுதி சடங்கிற்கு மக்கள் கூட்டம் அளவுக்கு அதிகமாக திரண்டது. இதுவரை அதுபோன்ற கூட்டம் எங்கும் திரண்டதில்லை.

Categories

Tech |