Categories
தேசிய செய்திகள்

மக்கள் சேவையில்… 20 ஆம் ஆண்டில் அடி வைக்கும்… பிரதமர் நரேந்திர மோடி…தொடரும் அரசு பயணம்…!!!

அரசின் தலைவராக மக்கள் சேவையில் எந்தவித இடைவெளியும் இல்லாமல் இன்று தனது இருபதாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

பிரதமர் நரேந்திர மோடி முதலமைச்சர் மற்றும் பிரதமர் பதவிகள் என்று ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்டு அரசின் தலைவராக தொடர்ந்தே 19 ஆண்டுகளை நிறைவு செய்து 20 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். கடந்த 2001 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏழாம் தேதி குஜராத் மாநில முதலமைச்சராக முதல் முறையாக மோடி பதவியேற்றார். அதனைத் தொடர்ந்தே 2002,2007 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து மூன்று முறை முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

மூன்றாவது முறை முதலமைச்சராக பதவியில் இருந்த போது 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி கண்ட நரேந்திர மோடி நாட்டின் 16 ஆவது பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி கண்டு இரண்டாவது முறையாக பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். இவற்றைத் தொடர்ந்து அரசின் தலைவராக மக்கள் சேவையில் இன்று 20 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள பிரதமர் நரேந்திர மோடி.

Categories

Tech |