பீகார் மாநிலம் ரோத்தாசிலுள்ள கோபால் நாராயண் சிங் பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினார். இதையடுத்து அவர் பேசியதாவது “ஒருவர் தாம் விரும்பும் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்கலாம். எனினும் மக்கள் தன் தாய்மொழியை மறந்து விடக்கூடாது. மேலும் தாய் மொழியைப் பயன்படுத்துவதோடு, அதன் வளர்ச்சிக்கும் உதவவேண்டும்.
இந்த தாய் மொழிதான் நாட்டின் வளர்ச்சி மற்றும் வளமைக்கு கை கொடுக்கும். இதனிடையில் பெற்றோர் தம் குழந்தைகள் தாய் மொழியில் பேச ஊக்குவிப்பதே நாட்டுக்குப் பெருமை சேர்க்கும். பிரதமர் மோடியின் முயற்சியால் இந்தியாவில் இப்போது பிற நாடுகளுடன் போட்டியிட முடிகிறது. இளைஞர்களுக்கான “ஸ்டார்ட்அப்” ஆகியவற்றுக்கான வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. பிறரின் நலனுக்காக இளைஞர்கள் ஒத்துழைக்கவும், பாடுபடவும் வேண்டும்” என்று அவர் கூறினார்.