இந்தியாவில் பத்து வருடங்களுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. சென்ற வருடம் பிப்ரவரி மாதத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பானது நடைபெற இருந்தது. ஆனால் இது கொரோனாவால் தாமதமாகிவிட்டது. இந்த வருடம் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற இருக்கிறது. இந்நிலையில் மக்கள்தொகை கணக்கெடுப்புவிதிகள் 2022 வாயிலாக ஒருமாற்றம் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக அறிக்கை வெளியாகியது. அந்த வகையில் மக்கள் தாங்களாகவே ஆன்லைனில் சுயமாக பதிவு செய்துகொள்வதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இதில் மின்னணு வடிவம் எனும் வார்த்தைகள், தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 பிரிவு 2 துணைப்பிரிவு (1)-ன் உட்பிரிவு (ஆர்) வழங்கப்பட்ட அதே பொருளைக் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த தங்களின் விபரங்களை தாமாகவே முன் வந்து ஆன்லைன் மூலமாக பதியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்கள் கடந்த காலத்தைப் போன்றே உங்கள் வீடுகளுக்கும் வருவது தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த புதிய மாற்றங்கள்
# சுயகணக்கெடுப்பு என்பது மக்கள்தொகை கணக்கெடுப்பு அட்டவணையை சுயமாகவே பூர்த்தி செய்து சமர்ப்பிப்பது ஆகும்.
# காந்த ஊடக வெளியீடுகள் வாயிலாக மக்கள்தொகை கணக்கெடுப்பு விபரங்களை வெளியிடுவது குறித்த விதி எண் 5-இல் ஊடகம் எனும் வார்த்தை மின்னணு (அல்லது) வேறு ஏதேனும் ஊடகம் என்று மாற்றப்பட்டு உள்ளது.
# மக்கள் தொகை கணக்கெடுப்பு அட்டவணையை சுய கணக்கீடு வாயிலாக நிரப்புவதற்கு அனுமதிக்கும் விதி 6ல் ஒரு பிரிவு சேர்க்கப்பட்டு இருக்கிறது.
# பாரபட்சம் இன்றி ஒரு நபர் மக்கள் தொகை கணக்கெடுப்பு அட்டவணையை நிரப்பி பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
# மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்கு 10 இயக்குனர்களை மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்து இருக்கிறது. அதே சமயம் மக்கள்தொகை கணக்கெடுப்பு துவங்கும் நாள் அறிவிக்கப்படவில்லை.