மக்கள் தொகை சரிவை எதிர்கொள்வதற்கு பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றால் 13 லட்சம் பரிசு தொகையை ரஷ்ய அதிபர் புதின் அறிவித்திருக்கிறார். இது பற்றி ரஷ்யா அதிபர் புதின் கூறி இருப்பதாவது ரஷ்யாவில் மக்கள் தொகை தொடர்ந்து சரிவு ஏற்பட்டு கொண்டிருக்கிறது. இதனை எதிர்கொள்வதற்கு பத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுக்கும் ரஷ்ய பெண்களுக்கு 13 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்படுகின்றது.
தங்களின் பத்தாவது குழந்தைக்கு ஒரு வயது நிறைந்த உடன் குழந்தையின் தாயிடம் வழங்கப்படும். மேற்பட்ட குழந்தைகளை பெற்ற பெண்களுக்கான சோவிய சகாப்த விருது என அழைக்கப்படுகின்றது. மேலும் இது உக்ரைனில் நடைபெற்ற போரினால் மரணம் அடைந்துள்ள ரஷ்யாவின் மக்கள் தொகை நெருக்கடியை மீட்டெடுப்பதற்கான ஒரு முயற்சியாகும் என தெரிவித்துள்ளார்.