வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, ஐக்கிய ஜனநாயக கட்சியின் தொகுதி கூட்டணி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதனை அடுத்து ஒரு சில கட்சிகளின் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனால் அரசியல் களம் பரபரப்பாக உள்ளது.
இந்நிலையில் மக்கள் நீதி மையம் கட்சியும், சமத்துவ மக்கள் கட்சியும், ஐக்கிய ஜனநாயக கட்சியும் சேர்ந்து கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் மக்கள் நீதி மையம் கட்சி 154 இடங்களில் போட்டியிடப்போவதாகவும், சமத்துவ மக்கள் கட்சி 40 இடங்களிலும், ஐக்கிய ஜனநாயக கட்சி 40 இடங்களிலும் போட்டியிட இருப்பதாகவும் ஒப்பந்தம் போடப்பட்டு கையெழுத்தாகியுள்ளது.