மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணியில் இருந்து ஒரு முக்கிய கட்சி விலகுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் கட்சிகள் போட்டி போட்டு தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். தொகுதிகள் பங்கீடும் நடைபெற்று வருகிறது. இதில் மக்கள் நீதி மைய கட்சியில் இருந்து தமிழ்நாடு இளைஞர் கட்சி விலகுவதாக அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் அதில் உடன்பாடு இல்லாததால் அந்த கட்சியில் இருந்து விலகுவதாக தமிழ்நாடு இளைஞர் கட்சி அறிவித்துள்ளது.