தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் யாருடன் கூட்டணி என்பதற்கு கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
இவர்களுக்கு மத்தியில் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமலஹாசன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில், மக்கள் நீதி மையம் யாருடன் கூட்டணி என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தார். பதில், சில கூட்டுக்கள் உடையும், உருவங்கள் மாறும் அன்று சொல்கிறேன் நாங்கள் யாருடன் கூட்டணி என்று என்று தெரிவித்துள்ளார். எம்ஜிஆர் போட்ட இரண்டு இலைகளில் இரண்டு பேர் சாப்பிடுகிறார்கள். ஆளுக்கு ஒரு பக்கம் இழுக்கிறார்கள் என்று ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் -ஐ விமர்சனம் செய்துள்ளார்.