பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கையில் கடுமையான பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. அந்த ஏரி பொருட்களுக்காக பல கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். மேலும் உக்ரைன் போர் தொடுத்து இருப்பதால் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்து இருக்கின்றன. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு தடை விதித்துள்ளது. இருந்தபோதிலும் ரஷ்யாவிடமிருந்து இந்தியா தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கி வருகின்றது.
உக்ரைன் பிரச்சினையில் மற்ற தெற்கு ஆசிய நாடுகளைப் போல நடுநிலை வகித்து வரும் இலங்கை ரஷ்யாவிடமிருந்து இரண்டு வாரங்களுக்கு முன்னதாக 99 ஆயிரம் டன் கச்சா எண்ணெய் வாங்கியுள்ளது. இந்த நிலையில் மீண்டும் ரஷ்யாவிடமிருந்து வாங்க தயாராக இருக்கின்றது. இது பற்றி இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, இலங்கை எரிபொருள் தேவை அதிகமாக உள்ளது. வழக்கமாக வாங்கும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து கச்சா எண்ணையும், நிலக்கரியும் வாங்க முயற்சி செய்து வருகின்றோம்.
வேறு எங்காவது கச்சா எண்ணெய் கிடைத்தாலும் வாங்குவோம். இல்லையென்றால் மீண்டும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவோம். தனியாரிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக எங்கள் அதிகாரிகள் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்தநிலையில் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தாங்களே உருவாக்கிக் கொண்டது தான். காய்கறி விலை மூன்று மடங்கு கூடியுள்ளது. மேலும் நெல் சாகுபடி மூன்றில் ஒரு பங்கு குறைந்து விட்டது.நான் இதற்கு முன்னதாக அரசாங்கத்தில் இருந்த போதெல்லாம் மக்களுக்கு மூன்று வேளை உணவு கிடைப்பதையும் வருமானம் உயர்வதால் உறுதி செய்து இருக்கின்றேன். ஆனால் தற்போது மக்கள் படும் வேதனையை ஒரு குடிமகனாகவும் பிரதமராகவும் அச்சத்துடன் பார்த்து வருகின்றேன்.
உணவு இல்லாமல் எரிபொருள் இல்லாமல் மக்கள் சிக்கி தவிப்பதை இதற்கு முன் நான் பார்த்தது இல்லை. உக்ரைன் போரும் பொருள் விநியோக சங்கிலியில் பாதிப்பை ஏற்படுத்தி எங்கள் பொருளாதாரத்தை பாதித்துவிட்டது. மேலும் 2024 ஆம் ஆண்டு வரை உணவு தட்டுபாடு நீடிக்கும். உணவு தானிய ஏற்றுமதியை பல நாடுகளும் நிறுத்தியுள்ளது. இந்த நிலையில் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க என்னென்ன திட்டங்கள் அவசியம் என நாங்கள் அடையாளம் காண வேண்டும். அந்த திட்டங்களுக்கான சீனாவிடம் அல்லது வேறு நாடுகளிடம் கடன் பெற வேண்டும் மற்ற நாடுகளுடன் சீனாவும் எங்களுக்கு நிவாரணம் அளிக்க சம்மதம் தெரிவித்து இருக்கின்றது என அவர் கூறியுள்ளார்.