குஜராத்தில் ஆட்சிக்கு வந்தால் அனைத்து பெண்களுக்கும் மாதம் 1,000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய இரு மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி கட்சி அடுத்ததாக குஜராத், கோவா உட்பட ஒரு சில மாநிலங்களில் ஆட்சியைப் பிடிப்பதற்கு தீவிரமாக வேலை செய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதினால் அந்த மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க திட்டமிட்டு கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் குஜராத்தில் ஆம் ஆத்மீ ஆட்சிக்கு வந்தால் 18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் அனைவருக்கும் ரூபாய் மாதம் ஆயிரம் உதவி தொகை வழங்கப்படும் என இது இலவசமல்ல என்றும் மக்களின் உரிமை எனவும் கூறியுள்ளார். மேலும் மக்கள் பணம் மக்களுக்கே செல்ல வேண்டும் என்றும் சுவிஸ் வங்கிக்கு செல்லக்கூடாது எனவும் ஆம் ஆத்மீ ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.