Categories
மாநில செய்திகள்

மக்கள் பணியாற்றுவது தான் மேயரின் பணி… சென்னைக்கு பெருமை சேருங்கள்… முதல்வர் மு.க ஸ்டாலின் உரை!!

சென்னைக்கு பெருமை சேர்க்க நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகளுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சிங்காரச் சென்னை 2.0 தூய்மை பணிகளுக்காக ரூ 36.52 கோடி மதிப்பில் பேட்டரியால் இயங்கும் 1684 மூன்று சக்கர வாகனங்கள், 15 கம்பாக்டர் இயந்திரங்களின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.. அதன் பின் மாநகராட்சி பணியின்போது உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 195 பேருக்கு பணி ஆணையை வழங்கினார்.. அதனைத் தொடர்ந்து சென்னை பெருநகர மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்..

அப்போது அவர் பேசியதாவது, சென்னைக்கு பெருமை சேர்க்கும் வகையில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுங்கள். மாநகராட்சி வளாகத்திற்குள் வந்ததும் என் நினைவுகள் 1996க்கு சென்று விட்டது. மக்கள் வாக்கை பெற்ற முதல் மேயராக பதவி ஏற்றேன். மக்கள் பணியாற்றுவது தான் மேயரின் பணி என்று செயல்பட்டேன்.

இந்த சாலை வழியே பயணம் செய்யும் போதெல்லாம் ரிப்பன் மாளிகையை பார்த்துக் கொண்டே தான் செல்வேன்.. ரிப்பன் மாளிகையை பார்க்கும்போது மேயராக இருந்தது தான் ஞாபகம் வருகிறது. பல்வேறு வரலாற்று சிறப்புகளை கொண்டது ரிப்பன் மாளிகை. நான் ஏற்ற பொறுப்பை அமைச்சர் கே என் நேருவிடம் ஒப்படைத்து உள்ளேன் என்று நினைவுகளுடன் பேசினார்..

Categories

Tech |