Categories
மாநில செய்திகள்

மக்கள் பணியை ஓய்வில்லாமல் செய்கிறோம்…. இதுதான் எங்கள் ஆட்சி…. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்…!!

கரூர் மாவட்டத்தில் திட்ட பணிகளை தொடங்கி வைப்பது தொடர்பாக அரசு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டார். அவர் புதிய திட்ட பணிகளுக்கான அடிகல்லை நாட்டியதோடு, நலத்திட்ட உதவிகளையும் மக்களுக்கு வழங்கினார். இதனையடுத்து தமிழக முதல்வர் விழாவில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் கரூர் மாவட்டத்தில் கடல் இல்லை என்றாலும் கூட மக்கள் கூட்டமே கடல் போன்று காட்சியளிக்கிறது என்றார்.

இதனையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி அனைத்து காரியங்களையும் சிறப்பாக செய்து முடிக்க கூடியவர். அவரை நான் பல முறை பாராட்டி இருக்கிறேன். இருப்பினும் விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்த அமைச்சர் செந்தில் பாலாஜியை நான் பெருமிதத்தோடு மறுபடியும் பாராட்டிக் கொள்கிறேன் என்றார். அதன்பிறகு 1 வருடமாக நாங்கள் மக்கள் பணியை சிறப்பாக செய்து வருகிறோம் எனவும், அதற்கு உதாரணம் கரூர் மாவட்டமே என்றார்.

இதனையடுத்து எந்த ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தாலும் முதல் ஆறு மாத காலத்திற்கு அவர்களிடம் மக்கள்  எதையுமே எதிர்பார்க்க மாட்டார்கள். அதேபோன்று ஆட்சிக்கு வந்த கட்சியும் ஒரு வருட காலத்திற்கு மக்களுக்கு எந்த ஒரு நலத்திட்டங்களையும் செய்ய மாட்டார்கள். அவர்கள் ஒரு வருடம் முடிந்து  2-வது வருடம் தொடங்கும் போது தான் மக்களுக்காக ஏதாவது நலத்திட்டங்களை செய்வார்கள். ஆனால் திமுக மட்டும் தான் ஆட்சிப்பொறுப்பை ஏற்றதில் இருந்து இன்று வரை ஓய்வில்லாமல் மக்கள் பணியே மகேசன் பணி என்று மக்களுக்காக தங்களுடைய கடமைகளை செய்து கொண்டிருக்கிறது.

ஒரு வருட காலத்திற்குள் நாங்கள் மக்களுக்கு செய்த ஏராளமான நலத்திட்ட உதவிகளை நினைக்கும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது எனவும், மானத்தைப் பற்றி கவலைப்படும் ஆயிரம் பேரை கூட எதிர்த்து நிற்கலாம்  ஆனால் மானத்தை பற்றி கவலைப்படாத ஒருவரை கூட எதிர்த்து நிற்க முடியாது என்ற பெரியார் வாசகத்தையும் கூறினார். மேலும் மானத்தைப் பற்றி கவலைப்படாதவர்கள் கூறும் விமர்சனங்களை பற்றி நான் கவலைப்பட மாட்டேன் என்றார். அதன்பிறகு என்னை  விமர்சித்து பிரபலமாகி விடலாம் என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்  அவர்களை பார்த்து நான் வருத்தப்படுகிறேன் என்று முதல்வர் கூறினார்.

Categories

Tech |