தமிழகத்தில் புயலைக் கண்டு மக்கள் பதற்றமடைய வேண்டாம் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மேலும் தீவிரமடைந்து புயலாக உருவெடுத்துள்ளது. இதனையடுத்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள செய்தியில், “நிவர் புயல் கரையை கடந்து விட்டது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை மக்கள் வெளியே வரவேண்டாம். புயல் தற்போது தீவிரமடைந்துள்ளது. ஆனாலும் மக்கள் பதட்டமடைய வேண்டாம்.
மக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய நேரம் இது. ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்கள் ஏழு நாட்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை கைவசம் வைத்துக் கொள்ளுங்கள்” என்று அவர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.