Categories
அரசியல் மாநில செய்திகள்

“மக்கள் பாஜக பக்கம் இருக்கிறார்கள்”…. குஷ்பு கருத்து….!!!!

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், மணிப்பூர், கோவா உள்ளிட்ட 4 மாநிலங்களில் பா.ஜ.க. முன்னிலை வகித்து வருகிறது. மேலும் பா.ஜ.க இந்த 4 மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்கிறது. பா.ஜ.க.வின் இந்த அமோகமான வெற்றி குறித்து டுவிட்டரில் பதிவிட்ட குஷ்பு, “தேர்தல் முடிவுகள் மக்கள் பா.ஜ.க.வுடன் இருப்பதை தெளிவாகக் காட்டுகிறது.

நம்முடைய பிரதமர் நரேந்திர மோடி மீதும் கட்சி மீதும் மக்கள் வைத்துள்ள அளவற்ற நம்பிக்கையை யாராலும் தடுக்க இயலாது. இந்திய தேசிய காங்கிரஸ் மேலும் சிதைந்துவிட்டது. மக்களுக்கு ஆதரவாக நிற்பவர்களுக்கும், அவர்களுக்காக பாடுபடுபவர்களுக்கும் தான் மக்கள் வாக்களிப்பார்கள். அதனை பா.ஜ.க. கட்சியில் உள்ள நாங்கள் செய்கிறோம். மக்களுடன் நாங்கள் இருக்கிறோம். பாஜகவை வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி. செய்தி, சித்தாந்தம், கடுமையாக உழைத்த தன்னார்வலர்கள் பலரும் மக்களிடம் ஒவ்வொரு திட்டத்தையும் கொண்டு சேர்த்தனர். பிரதமர் நரேந்திர மோடி ஜி இல்லாமல் இந்த வெற்றி பாஜகவுக்கு கிடைத்திருக்காது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |