Categories
தேசிய செய்திகள்

மக்கள் மடிந்த பின்பு… GDP அதிகரித்து என்ன பயன்?….!!!!

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுபடுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது.அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அதிலும் சிலர் உண்பதற்கு உணவு இல்லாமல் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அரசும் பல நிவாரணங்களை வழங்கி வருகிறது.

இந்நிலையில் தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இந்த ஜகத்தினை அழிப்போம் என்று பாரதியார் கூறியதையும் கேட்டதுண்டு. கொரோனா ஊரடங்கு காரணமாக மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் உணவு கிடைக்காமல் மக்கள் மடிந்த செய்தியையும் கேட்டதுண்டு. ஆனால் இந்த இரு மாநிலங்கள் ஜிடிபியில் முதலிடம், அதிக அளவு முதலீடுகளை ஈர்த்துள்ளன என்று நிதி ஆயோக் கூறியுள்ளது. உணவு கிடைக்காமல் மக்கள் மடிந்த பிறகு ஜிடிபி அதிகரித்து என்ன பயன் என்ற கேள்வி எழுந்துள்ளன.

Categories

Tech |