ரஷ்ய பொதுமக்கள் மீது உக்ரைன் நடத்திய ஏவுகணை தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போரானது எட்டு மாதங்களை தாண்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த படையெடுப்பின்போது டொனட்ஸ்க், லூகான்ஸ்க், கெர்சன் மற்றும் ஜபோரிஜியா போன்ற நான்கு பகுதிகளை கைப்பற்றிய ரஷ்யா அவற்றை தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளது. இதனை ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின் போது அந்த நாட்டு அதிபர் புதின் அறிவித்துள்ளார். தொடர்ந்து அந்தப் பகுதியில் ராணுவ சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் ஒன்றான கெர்சன் நகரில் நடைபெற்ற ஏவுகணை தாக்குதலில் குடிமக்கள் நான்கு பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
இதற்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது இது பற்றி கெர்சன் நகருக்கு புதிதாக நியமிக்கப்பட்ட ரஷ்யாவின் துணை கவர்னர் கிரில் ஸ்டிரெமவுவ் பேசும்போது, ரஷ்யாவுடன் இணைந்த பகுதிகளில் இருந்து வெளியேறக்கூடிய பொதுமக்கள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி வருகின்றது. இதற்கு அமெரிக்கா விநியோகித்த ஹிமர்ஸ் ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்துகிறது என குற்றச்சாட்டு தெரிவித்து இருக்கிறது. மேலும் இது பற்றி உக்ரேனிய அதிபர் ஒருவர் பேசும்போது தாக்குதல் நடந்த விஷயங்களை ஒப்புக் கொண்டுள்ளார் ஆனால் குடிமக்களுக்கு தடை விதிக்கப்பட்ட பின்னர் தாக்குதல் நடத்தப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த தாக்குதலுக்கு எந்த ரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன என்ற விவரங்கள் அவர் தெரிவிக்கவில்லை.