உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அம்மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் கலந்துகொண்டார். இதில் அவர் பேசியதாவது, “நாம் அரசியலுக்கு வருவது மக்களின் மீது காரை ஏற்றி நசுக்கவோ, மக்களிடமிருந்து கொள்ளை அடிக்கவோ இல்லை.
மேலும் மக்கள் நம் முகத்தைப் பார்த்தால் புன்சிரிப்போடு வரவேற்க வேண்டுமே தவிர முகத்தை திருப்பி கொண்டு செல்லக்கூடாது. எனவே மக்கள் நமது நடத்தை பார்த்து தான் வாக்களிப்பார்கள். ஆகவே தொண்டர்களின் நடத்தையானது மக்களின் நம்பிக்கை பெருமளவிற்கு இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.