Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்… கடும் எச்சரிக்கை…!!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் விரைவில் கரையை கடக்கும் என்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருப்பெற்றுள்ளது. மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24 மணி நேரத்தில் நிவர் புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து 740 கிமீ புதுச்சேரியில் இருந்து 700 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.

அதனால் நாளை மறுநாள் பிற்பகல் மாமல்லபுரம்-காரைக்கால் இடையே புயல் கரையை கடக்கும். அதனால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |