Categories
அரசியல் மாநில செய்திகள்

“மக்கள் விரோத இயக்கமாக செயல்படும் ஆர்எஸ்எஸ்?”…. தமிழக எம்பி பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

நேற்று செய்தியாளர்களை சந்தித்த விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் ஆர்எஸ்எஸ் திமுக அரசுக்கு எதிராக பெரிய சதி செய்து வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதாவது தமிழகத்தில் மக்கள் ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. அதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பெரும்பான்மை உறுப்பினர்களுடன் ஆட்சி செய்து வருகிறார். ஆனால் அதற்கு ஊறு விளைவிக்கும் வகையில் திமுகவுக்கு எப்படியாவது களங்கம் ஏற்படுத்தி விட வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் சதி செய்து வருகிறது.

அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகத்தை ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் தேவையில்லாமல் கெடுக்க பார்க்கிறார்கள். ஏற்கனவே பாஜக தலைவர் அண்ணாமலை மக்களால் சட்டமன்ற தேர்தலில் நிராகரிக்கப்பட்டார். இந்நிலையில் ஆர்எஸ்எஸ் தமிழகத்தில் மக்கள் விரோத இயக்கமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதோடு மட்டுமில்லாமல் ஆர்எஸ்எஸ் பாஜக தலைவர் அண்ணாமலையின் கைப்பாவையாக இயங்குகிறது.

தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் அவமானப்படுத்தப்பட்டது, நீட்தேர்வு விலக்கு உள்ளிட்டவை குறித்து பேசவே அண்ணாமலை பயப்படுகிறார். இருப்பினும் பாஜக தலைவரான அண்ணாமலைக்கு தமிழக பிரச்சனையை பற்றி பேச வேண்டிய கடமை உள்ளது. ஆனால் அதை செய்ய தவறுகிறார் என்று மாணிக்கம் தாகூர் பரபரப்பாக பேசியுள்ளார்.

Categories

Tech |