நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் அனைத்து மாநிலங்களிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக மக்கள் எங்கு சென்றாலும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. இந்நிலையில் நாட்டில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக பல மாநிலங்கள் கட்டுப்பாடுகளை வெகுவாக தளர்த்தியுள்ளது.
இதில் முக்கியமாக பொது முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று மராட்டியம் மற்றும் டெல்லி அரசுகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பை வெளியிட்டன. இந்த நிலையில் அரியானா அரசும் தற்போது பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.