நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகளில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. அதன்படி மக்காச்சோளம் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. மக்காச்சோளத்தில் இரும்பு சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், துத்தநாகம் மற்றும் செம்பு சத்து போன்ற பல வகையான உடலுக்கு அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்துள்ளன.
மேலும் மற்ற உணவுப் பொருள்களில் இல்லாத வேதிப் பொருளான செலினியம் தாது பொருளும் சோளத்தில் நிறைந்துள்ளது. இது இதயத்தின் துடிப்பை உறுதி செய்வதோடு, எலும்புகளின் அடர்த்தி மற்றும் உறுதி தன்மையை அதிகப் படுத்துகிறது. சிறுநீரகங்களின் சீரான செயல்பாட்டிற்கு உதவுகிறது. உடலின் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. பெரும்பாலான முக அழகு சாதனப் பொருள்களில் சோளம் சார்ந்த பொருள்கள் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. இது முக அழகிற்கு பெரிதும் உதவுகிறது.
அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுவது, ஞாபக மறதி நிலை மற்றும் தோல் சம்பந்தமான வியாதிகள் ஒன்று சேர்ந்து ஏற்படுவதை தடுக்கிறது. உடலில் நரம்பு மண்டலங்கள் சீராக இயங்க உதவும். தோல் வியாதிகள். உடல் எடை அதிகரிக்க இது மிகவும் உதவுகிறது. சோளத்தில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் சத்துக்களை குறைத்து இரத்த நாளங்கள், நரம்புகள் மற்றும் இதயத்திற்கு செல்லக்கூடிய நரம்புகள் போன்றவற்றில் கொழுப்புகள் படிந்து விடாமல் தடுத்து சீரான ரத்த ஓட்டம் செல்வதை உறுதி செய்து இதய பாதிப்புகள் ஏற்படாமல் காக்கிறது.
சோளத்தை பச்சையாக சாப்பிடுவதால் இதயத்தை காக்கும். ரத்த சோகை குறைபாடு நீங்கும். கண் பார்வை குறைபாடு நீங்கும். நீரிழிவு பிரச்சனை, மூலம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வாக அமையும். வயிறு புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுப்பதில் மக்காச்சோளம் முக்கிய பங்கு வகிக்கிறது. கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி சோளம் சாப்பிடுவதால் அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தையின் சீரான வளர்ச்சிக்கும் உதவுகிறது. உடம்பில் உள்ள உப்பைக் கரைக்கும் தன்மை கொண்டது. எனவே இவ்வாறு பல்வேறு சத்துக்கள் நிறைந்த மக்காச்சோளத்தை சாப்பிடுவது மிகவும் நல்லது.