Categories
உலக செய்திகள்

மக்கா பெரிய மசூதி… ஏழு மாதங்களுக்குப் பின்னர்… தினசரி தொழுகைக்கு அனுமதி…!!!

சவுதி அரேபியாவில் 7 மாதங்களுக்கு பிறகு முதன்முறையாக மக்காவில் உள்ள பெரிய மசூதியில் தினசரி தொழுகை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இஸ்லாத்தின் புனித இடமாக திகழும் மக்காவில் உள்ள கிராண்ட் மசூதியில் தொழுகைக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தற்போது ஏழு மாதங்களுக்கு பின்னர் முதன்முறையாக சவுதி அரேபியா தனது குடிமக்கள் மற்றும் நாட்டிற்குள் வசிப்பவர்களை தினசரி தொழுகை நடத்துவதற்கு நேற்று அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி முதல் உம்ரா செய்வதற்கு பாதுகாப்பானதாக கருதப்படும் குறிப்பிட்ட நாடுகளின் பயணிகளை மட்டுமே சவுதி அரேபியா அனுமதிக்கும் என்றும், இந்த கட்டுப்பாடு கொரோனா பாதிப்பு குறையும் வரையில் நீடிக்கும் என்றும் சவுதி செய்தி நிறுவனமான எஸ்பிஏ தெரிவித்துள்ளது.

 

Categories

Tech |