நடு ரோட்டில் சில பெண்கள் காருக்குள் அமர்ந்து மது குடிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தள பரவிவருகிறது.
தற்போது மது குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் பெண்கள் தற்போது அதிகமாக மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். ஆண்களுக்கு பெண்கள் இளைத்தவர்கள் இல்லை என்று பல துறையில் பெண்கள் சாதித்து வந்தாலும், இது போன்ற விஷயங்களிலும் ஆணுக்கு நிகரானவள் நாங்களும் இருக்கிறோம் என்று குடித்து வருகின்றனர். அது போன்ற ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ஆந்திர மாநிலம் நடு ரோட்டில் காருக்குள் முன் சீட்டில் மூன்று பெண்களும், பின் சீட்டில் நான்கு பெண்களும், அமர்ந்து விலை உயர்ந்த பட்டுப்புடவை பூ பொட்டு வைத்து மங்களகரமாக அமர்ந்து ஒரு கையில் மது பாட்டிலும், மறுகையில் சைடிஸ் இருக்கு சிக்கன், சிப்ஸ் போன்றவற்றை வைத்து சாப்பிட்டு கொண்டிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இதனை அப்பெண்களில் ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளார். பெண்கள் குடிக்க கூடாது என்பது சட்டம் இல்லை, ஆனால் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக அந்தப் பெண்களின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.