Categories
தேசிய செய்திகள்

மங்களூருவில் நபர் படுகொலை எதிரொலி… 2 நாட்களுக்கு… 144 தடை உத்தரவு அமல்…!!!!!!

கர்நாடகாவின் மங்களூர் நகரில் சூரத் கல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில்  ஜலீல் என்பவர் தனது கடை முன்பாக நேற்று இரவு நின்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள் திடீரென தாக்கி கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி உள்ளனர். இதில் காயமடைந்த ஜலீல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார். இதனை தொடர்ந்து விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மேலும் இந்த சம்பவம் எதிரொலியாக மங்களூருக்கு உட்பட்ட பகுதிகளில் அதாவது சூரத்கல்,பாஜ்பே,காவூர் மற்றும் பணம்பூர் போன்ற காவல் நிலைய பகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் இன்று காலை 6 மணி முதல் வருகிற 27-ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வேறு எந்த விதமான வன்முறையும் பரவி விடாமல் தடுப்பதற்காக இந்த உத்தரவை நகர கமிஷனர் பிறப்பித்துள்ளார். அதேபோல் வருகிற 27-ஆம் தேதி காலை 10 மணி வரை மது விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |