கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரில் கடந்த மாதம் 19-ம் தேதி ஆட்டோ குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் காயம் பட்ட இருவரில் ஆட்டோ ஓட்டுனரான ஷாரிக் என்ற வாலிபர்தான் ஆட்டோவில் குக்கர் வெடி குண்டை கொண்டு சென்று நாச வேலைக்கு திட்டமிட்டது தெரியவந்தது. இவரை காவல் துறையினர் கைது செய்ததோடு தமிழகம் உள்பட பல்வேறு பகுதிகளிலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் கர்நாடக மாநில அரசு குக்கர் குண்டுவெடிப்பு சம்பவத்தை என்ஐஏ விசாரணைக்கு மாற்றுவதற்கு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மங்களூர் போலீஸ் கமிஷனர் என். சஷிகுமார் கூறியதாவது, ஆட்டோ குண்டுவெடிப்பு சம்பவத்தை இனி என்ஐஏ விசாரிக்கும் என்று கூறியுள்ளார். மேலும் தற்போது ஆட்டோ குக்கர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.