நடிகர் அஜித்தின் மங்காத்தா திரைப்படம் செய்துள்ள வசூல் சாதனை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ‘மங்காத்தா’. இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் அர்ஜுன், வைபவ், பிரேம்ஜி, மகத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
நடிகர் அஜித்தின் 50வது படமான இது அதிரடி திகில் மிகுந்து செம ஹிட் கொடுத்தது. இந்தத் திரைப்படம் ரூபாய் 79 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. மேலும் நடிகர் அஜித்தின் திரைப்பட வாழ்க்கையில், இந்த திரைப்படம் தான் 50 கோடிக்கு மேல் வசூல் செய்த திரைப்படம் என்று கூறப்படுகிறது.