“மங்காத்தா” திரைப்படம் நடிகர் அஜித்குமாரின் சினிமா பயணத்தில் மாபெரும் வெற்றியை தேடி தந்தது. இந்த படம் அஜித்தின் 50-வது படம் என்பதால் ரசிகர்கள் மிகப்பெறிய அளவில் கொண்டாடினர். அஜித் நடிப்பில் வரும் பொங்களுக்கு துணிவு படம் வெளியாக இருக்கிறது. எச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இப்படத்தின் கதை பற்றி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அதாவது, மங்காத்தா படத்தில் 4 நபர்கள் இணைந்து ரூபாய்.500 கோடியை திருட திட்டமிடுவார்கள். இவற்றில் கடைசியாக அஜித் இணைந்து கொள்வார். அதேபோன்று துணிவு படத்தில் 4 குருப் தனித் தனியாக செயல்பட்டு ரூபாய் 5000 கோடியை திருட திட்டமிடுகிறார்களாம். இந்த 4 குருபிலும் அஜித் இருப்பார் எனவும் இறுதியில் அஜித் கொடுக்கும் ட்விஸ்ட் தான் படத்தின் வெற லெவல் மாஸ் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.