Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மசாஜ் சென்டரில் நடக்கும் குற்றங்கள்… போலீசார் அதிரடி சோதனை… 6 அழகிகள் மீட்பு…!!

மசாஜ் சென்டர் என்ற பெயரில் அழகிகளை வைத்து விபசாரத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேலம் செல்லும் சாலையில் தனியார் மசாஜ் சென்டர் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கே சில அழகிகளை வைத்து விபச்சாரம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் நாமக்கல் துணை சூப்பிரண்டு அதிகாரி  சுரேஷ் உத்தரவின்படி, இன்ஸ்பெக்டர் வேலுத்தேவன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையில் தனிப்படை அமைத்து காவல்துறையினர் மசாஜ் சென்டரில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த 6 அழகிகளை வைத்து பாலியல் தொழில் நடைபெறுவது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மசாஜ் சென்டரின் மேலாளரான கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த பிரசாந்த், திருச்சூரை சேர்ந்த அமுல்ராஜ் மற்றும் அழகிகளுடன் உல்லாசமாக இருந்த பரமத்தியை சேர்ந்த அருண்ராஜ், செல்லப்பம்பட்டியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் விஜய் ஆகிய 5 பேரையும் காவல்துறையினர் உடனடியாக கைது செய்து அந்த 6 அழகிகளையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்த அழகிகளின் புகைப்படங்களை செல்போன் மூலம் பிறருக்கு அனுப்பி 5,000 ரூபாய் வசூல் செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் மசாஜ் சென்டரில் உரிமையாளர்களான கேரளாவை சேர்ந்த நிஷா மற்றும் மதுரையை சேர்ந்த ராம் பிரசாத்குமார் ஆகியோரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்ற 6 அழகிகளையும் காப்பகத்திற்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |