ராஜ் தாக்கரேவின் பேச்சுக்கு சிவசேனா மூத்த தலைவர் பதிலடி கொடுத்துள்ளார்.
மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் நவநிர்மாண் சேனா கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே கலந்து கொண்டார். இவர் மசூதிகளின் வெளியே இருக்கும் ஒலிபெருக்கிகள் அதிக அளவு சத்தத்துடன் ஒலிக்கப்படுகிறது. இந்த சத்தத்தை நிறுத்தாவிட்டால் மசூதிகளுக்கு வெளியே அதிக அளவு சத்தத்துடன் ஹனுமன் புராணங்கள் ஒலிக்கப்படும் என்று கூறினார்.
இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பதிலளித்துள்ளார். அதாவது மராட்டிய மாநிலத்தில் அனைத்தும் சட்டப்படி தான் நடக்கும். மாநிலங்களில் சட்ட ஒழுங்கை நிலை நாட்ட உள்துறை மந்திரி சட்டப்படி அனைத்தையும் செய்வார். இன்னும் சட்டம் நடைமுறையில் இருக்கும் மாநிலம் மராட்டியம் ஆகும். இது பா.ஜ.க நிகழ்ச்சி என்று மக்கள் நினைத்தனர். மேலும் பா.ஜ.க ஆளும் பகுதிகளில் எந்த மாநிலத்தில் மசூதிகளில் இருக்கும் ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினார்.