Categories
உலக செய்திகள்

மசூதியில் ஏற்பட்ட திடீர் மோதல்…. 160 பேர் காயம்…!!!!!!

இஸ்ரேலின் ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதியில் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகைக்காக காலை ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கூடியிருந்தனர். அப்போது திடீரென இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரர்கள் மசூதியில் நுழைந்ததன் காரணமாக திடீரென அங்கு மோதல் ஏற்பட்டுள்ளது. மோதலுக்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை. மேலும் மோதல் தொடர்பாக பரவி வரும் வீடியோவில் பாலஸ்தீனியர்கள், வீரர்கள்  மீது கற்களை வீசுவது பதிவாகி இருக்கிறது.

மேலும் வீரர்களும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி மோதலை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்தனர். தடியடி, ரப்பர் குண்டுகளால் காயமடைந்த மற்றும் கண்ணீர் புகை குண்டு வீச்சில் பாதிக்கப்பட்ட 160 பாலஸ்தீனியர்கள்  மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக  செஞ்சிலுவை சங்க அவசர சேவை அமைப்பு கூறியுள்ளது.

Categories

Tech |