இஸ்ரேலின் அல் அக்ஸா மசூதியில் ஏற்பட்ட மோதலில் 31 பாலஸ்தீனர்கள் காயமடைந்தனர்.
இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேம் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் உள்ள அல்-அக்ஸா மசூதி வளாகத்தில் யூதர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய இரு பிரிவினரும் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவே இஸ்ரேல்- ஹமாஸ் போருக்கு முன் உதாரணமாக வழிவகுத்து வருகின்றது.
இந்நிலையில் அல்-அக்ஸா மசூதி வளாகத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட மோதலில் 150 பாலஸ்தீனர்கள் காயமடைந்துள்ளனர். அதை போன்று இந்த வாரமும் இஸ்ரேல் போலீசாருடன் மோதல் ஈடுபட்ட 31 பாலஸ்தீனர்கள் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் 14 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.