மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 33 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் வடக்கு நாட்டில் குண்டூஸ் மாகாணத்தில் இமாம் சாஹிப் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள மவ்லவி செகந்தர் மசூதியில் நேற்று குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்களை மீட்புக்குழுவினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து தலீபான்கள் ஆப்கானை கைப்பற்றியதில் இருந்து, குண்டுவெடிப்புகளும், தாக்குதல்களும் வழக்கமாகி வருகின்றன. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்து வருகின்றது.