Categories
தேசிய செய்திகள்

மசூதியில் ஹனுமான் துதி….. தொடரும் குளறுபடி…. 4 பேர் கைது…!!

கோவிலுக்குள் தொழுகை செய்த பிரச்சனை முடிவதற்குள் மசூதிக்கு சென்று ஹனுமனை துதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் இருக்கும் மதுராவில் அமைந்துள்ள அந்த் பாபா கோவிலில் கடந்த வியாழன் அன்று ஃபைசல் கான், சந்த் முகமது, நீலேஷ் குப்தா மற்றும் அலோக் ரத்தன்ஆகிய 4 பேரும் தொழுகை செய்துள்ளனர். இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சை எழுந்தது. இதனை தொடர்ந்து 4 பேர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை 15 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கோவர்தனில் இருக்கும் மசூதிக்குள் 4பேர் சென்று ஹனுமான் துதி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து எஸ்.பி கூறுகையில், “மதுரா மாவட்டத்தில் காவல்துறையும் நிர்வாகமும் அனைத்து செயல்பாடுகளையும் மறைமுகமாகவும் நேரடியாகவும் கண்காணிக்கிறது.

குழப்பத்தை ஏற்படுத்தும் எந்த நபராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார். மதுரா மாவட்ட ஆட்சியர் கூறுகையில், “சட்டத்தை விட உயர்ந்தவர்கள் யாருமில்லை. அமைதியான சூழலை கெடுக்க நினைக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” எனதெரிவித்துள்ளார்.

Categories

Tech |