Categories
தேசிய செய்திகள்

மசோதாவிற்கு எதிராக.. டெல்லியில் வன்முறை வெடித்தது…!!

டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது. 

டெல்லி பாரத் நகர் பகுதியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் பேருந்துகள் மீது தீ வைத்து எரிக்கப்பட்டது. குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் பொதுமக்கள், மாணவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுட்டனர். டெல்லியில் 3-பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்களும் சேதமடைந்துள்ளது.

Image result for டெல்லியில் தீ விபத்து

வன்முறையை கட்டுப்படுத்த முயன்ற போலீசார் மீது பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த வன்முறை சம்பவத்தில் மூன்று காவல்துறையினர் காயம் அடைந்துள்ளனர். கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பொதுமக்கள் மாணவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |