Categories
மாநில செய்திகள்

மஞ்சப்பை திட்டம் எதிரொலி!…. குறைந்தது பிளாஸ்டிக் பயன்பாடு…. அமைச்சர் வெளியிட்ட தகவல்….!!!!

சென்னை லயோலா கல்லூரியில் இந்தியன் சயின்ஸ் மானிட்டர் அமைப்பின் சார்பாக நடந்த சுற்றுச்சூழல் கருத்தரங்கில் தமிழ்நாடு சுற்றுச்சூழல், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ மெய்யநாதன் கலந்துகொண்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்த உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச் சூழலில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி மாணவர்கள் இடத்தில் அமைச்சர் பேசினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது “பூமி தாய்க்கு நன்றி செலுத்துகிற இத்தினத்தில், நாம் இயற்கையை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து தமிழகத்தை பசுமை தமிழகமாக மாற்றுவதற்காக “பசுமை தமிழகம் இயக்கம்”, அதேபோன்று சதுப்பு நிலங்களை காப்பதற்காக சதுப்பு நில இயக்கம், கிரீன் தமிழ்நாடு உள்ளிட்ட பல இயக்கங்களை துவங்கி இயற்கையை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

சென்ற டிசம்பர் மாதம் மீண்டுமாக மஞ்சப் பை எனும் திட்டத்தை முதலமைச்சர் அறிமுகப்படுத்தினார். அதன் வாயிலாக 20 சதவீத பிளாஸ்டிக்பயன்பாடு குறைக்கப்பட்டு, இது ஒரு மக்கள் இயக்கமாக மாறியிருக்கிறது. மண்ணையும், மக்களையும், கடல்வாழ் உயிரினங்களையும் மாசுபடுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை முழுவதுமாக தடைசெய்ய வேண்டும் என்ற கருத்துக்களையும் மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறோம்.

மனிதர்களுக்கு தேவையான அனைத்தையும் கொடுப்பது பூமித்தாய் தான். அதற்கு நாம் இன்று நன்றி செலுத்தவேண்டும். பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை தடுக்கும் நோக்கத்தில் வருகின்ற செப்டம்பர் 26 , 27 ஆம் தேதிகளில் இதுகுறித்து சென்னை வர்த்தக மையத்தில் கருத்தரங்குகள் நடக்க இருக்கிறது” என்று பேசினார்.

 

Categories

Tech |