மாரண்டஅள்ளி அருகே டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம், மாரண்டாஅள்ளி அருகில் எம்.செட்டிஅள்ளி கிராமத்தில் விவசாயியான பெரியசாமி(35) என்பவர் வசித்து வந்தார். இவருக்கு கெண்டையனஅள்ளி கிராமத்தில் சொந்தமான இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் மஞ்சள் சாகுபடி செய்து வந்துள்ளார். இந்நிலையில் மஞ்சளை நேற்று அறுவடை செய்து டிராக்டரில் ஏற்றி கொண்டு வந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக எம்.செட்டிஅள்ளி அருகே வரும்போது டிராக்டர் திடீரென சாலையோரம் இருந்த ஓடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.
இந்த விபத்தில் பெரியசாமி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளார். இதுகுறித்து மாரண்டஅள்ளி காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இத்தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பெரியசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டிராக்டர் கவிழ்ந்து விவசாயி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.