Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மஞ்சள் நிற பற்களை வெண்மையாக மாற்றும் ரகசியம்.. எளிய டிப்ஸ்..!!

மஞ்சள் நிற பற்களை வெண்மையாக எப்படி மாற்றுவது.? ரொம்ப எளிமையான ஒரு வீட்டு வைத்தியம், உங்களுக்காக..!

முதலில் நமக்கு அரை ஸ்பூன் தூள் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். இதோடு கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும். ஒரு சின்ன துண்டு இஞ்சி எடுத்து அதிலிருந்து சாறு எடுத்து ஒரு ஸ்பூன் இஞ்சி சாறு சேர்த்துக் கொள்ளுங்கள்.

கடைசியில் பாதி எலுமிச்சை மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும். அதை பிழிந்து இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

உப்பு, மஞ்சள்தூள், இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு இந்த நான்கும் ஒன்றோடு ஒன்று நன்றாக கலக்கி கொள்ள வேண்டும். காலை எழுந்ததும் பல் விளக்கும் பொழுது பேஸ்ட் இல்லாமல் நாம் கலந்து வைத்திருக்கும்  கலவையை வைத்து பற்களில் நன்றாக தேய்க்க வேண்டும்.

அதுவும் கறை  படிந்துள்ள இடத்தில் நன்றாக தேய்க்க வேண்டும். இதேபோல் வாரத்தில் இரண்டு நாட்கள் இவ்வாறு செய்தால், பற்களில் படிந்திருக்கும் எந்தவிதமான கறையாக  இருந்தாலும் நீங்கி விடும். மஞ்சள் கறையை எளிமையாக போக்கி பற்கள் வெண்மை நிறத்தில் மாறுவதற்கு ரொம்பவே உதவியாக இருக்கும்.

Categories

Tech |