பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய கோவில் தெருவில் கொத்தனார் ரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ருத்ரா தேவி(17) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 7-ஆம் தேதி ருத்ராதேவிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து ரத்தினத்திற்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த ருத்ராதேவி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனை அடுத்து வெளியே சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்த பெற்றோர் தங்களது மகள் தூக்கில் தூங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மகளை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.