Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி …. வாலிபருக்கு நடந்த விபரீதம் …. அதிர்ச்சியில் குடும்பத்தினர் ….!!

மஞ்சுவிரட்டில் காளை மாடு முட்டி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரளிப்பாறை ஆண்டுதோறும் மாசி மாதம் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 125-கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதனை பார்ப்பதற்காக ஏராளமான பார்வையாளர்கள் அங்கு திரண்டனர். இந்நிலையில்  காளைகள் பார்வையாளர்கள் கூட்டத்திற்குள் புகுந்து சுந்தரம் என்பவரை பலமாக தாக்கியுள்ளது.

இதில் படுகாயம் அடைந்த சுந்ததிரத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சுந்தரம் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் படுகாயமடைந்த 110 மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |