Categories
சினிமா தமிழ் சினிமா

மஞ்சு வாரியருடன் இணைந்த பிரபுதேவா…. வெளியான புதிய வீடியோ…. செம வைரல்….!!!!

நடிகை மஞ்சு வாரியார் தற்போது நடித்து வரும் “ஆயிஷா” என்ற திரைப்படத்தின் பாடல் வெளியாகியுள்ளது. 

“அசுரன்” திரைப்படத்தின் மூலம் தமிழில் மிகவும் பிரபலமான நடிகை மஞ்சு வாரியார். இவர் தற்போது “ஆயிஷா” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தை இயக்குனர் அமீர் பள்ளிக்கல் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு கதை, திரைக்கதையை ஆஷிக் கக்கோடி எழுத, கிராஸ் பார்டர் கேமரா பிரைவேட் லிமிடெட் என்னும் பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜக்காரியா தயாரித்திருக்கின்றார்.

இந்நிலையில் “ஆயிஷா” திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள  “கண்ணிலு கண்ணிலு மெய்யெழுதின கண்ணிலு… ” எனத் தொடங்கும் பாடலின் லிரிக்ஸ் வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த பாடலை ஜெயச்சந்திரன் இசையமைக்க, பி.கே.ஹரி நாராயணன் மற்றும் சுகைல் கோயா ஆகியோர் எழுதியுள்ளனர். மேலும் இந்த பாடலுக்கு பிரபுதேவா நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |